ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் இலங்கை வருகிறார்!

க்கிய நாடுகளின் உதவி செயலாளர் நாயகம், ஆசிய பசுபிக் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழு தகலவர், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட உதவி நிர்வாகி மற்றும் ஆசிய பசுபிக் பிராந்திய பணியக பணிப்பாளருமான ஹொலியங் ஸூ 2015 ஏப்பிரல் 4-10 ஆம் தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

ஸூ தனது இலங்கைக்கான இரண்டாவது பயணத்தில், பல உயர்மட்ட அரச உத்தியோகத்தர்கள், அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கையின் புதிய அரசியல் சூழலில் ஐ.நா.அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) மற்றும் ஏனைய ஐ.நா. நிறுவனங்களின் எதிர்கால உதவிகளை உறுதிசெய்வதுடன், குறிப்பாக UNDP பிரதான அபிவிருத்திப் பங்காளர்களை பலப்படுத்துவது பற்றி கருத்துப்பாரிமாற உத்தேசித்துள்ளார். 

ஸூ, இலங்கையின் அபிவிருத்தி நிலைமை பற்றி முதன்மை சிவில் சமூக பிரதிநிதிகளிடம் கொள்கை மட்டக் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். 

ஸூ, வட மத்திய மற்றும் வட மாகாணங்களுக்கான தனது பயணத்தின்போது அரச அதிகாரிகளையும் சமூக அமைப்புக்களின் பிதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதுடன் பயன்பெறுபவர்கள் மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் மேலதிக உதவிகளின் தேவைகளையும் கண்டறியவுள்ளார். 

அவர் இந்த மாகாணங்களில் ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட உதவிகளுடனான வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்ககளயும் மேற்பார்வை செய்யவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -