நிந்தவூரில் கலாச்சார விழாவும் நூல் வெளியீடும்!

சுலைமான் றாபி-
ம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தின் வரலாற்று வாழ்வியல்களை மீட்டிப் பார்க்கும் கலாச்சார நிகழ்வும், நூல் வெளியீட்டு நிகழ்வும் எதிர்வரும் 04ம் திகதி (சனிக்கிழமை) பி.ப 2.30 மணிக்கு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நிந்தவூர் பிரதேச செயலக கலாச்சாரப் பேரவையின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ஹாஜியாணி திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கலாச்சார நிகழ்விற்கு பிரதம அதிதியாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, பைசால் காசிம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ரி.பி. வணிகசிங்க, அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர்களான கே.விமலநாதன், எம்.ஐ.அமீர், கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.யு.டபிள்யு, விக்கிரம ஆராய்ச்சி மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் உள்ளிட்ட அதிதிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதே வேளை இந்த கலாச்சார விழாவில் பிரதான இரண்டு நிகழ்வுகளாக நிந்தவூரின் வரலாற்று வாழ்வியல் தொடர்பான நிகழ்வுகளும், புத்தக வெளியீடும் இடம்பெறவுள்ளதோடு, கலை இலக்கியத்துடன் தொடர்புடையவர்களும் இதில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -