மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமத்துக்கொரு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

த.நவோஜ்,ந.குகதர்சன்-
ரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் நிதியில் கிராமத்துக்கொரு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.

வாகரை பிரதேச செயலாளர் செல்வி.ஆர். இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் மாங்கேணியில் வீதி அமைப்பு, காயான்கேணியில் வீதி அமைப்பு, இறாலோடையில் வீதி அமைப்பு, பனிச்சங்கேணியில் மதகு அமைப்பு (கல்வெட்டு) ஆகிய திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது.

இவ்வாரம்ப நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை காயான்கேணி பகுதியில் சமுர்த்தி வீடமைப்பு அமைச்சால் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 75 வீடுகள் அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்து முதலாவது வீட்டுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கல் வைத்துள்ளார். அத்தோடு இம் முதலாவது வீட்டு உரிமையாளருக்கு சிறு தொகை பணத்தை அன்பளிப்பாக அவ்விடத்தில் வைத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பொருளாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி, பொருளாதார உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள், கிராம அமைப்பின் பிரதிநிதிகள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -