மேமன்கவி-
வலம்புரி கவிதா வட்டத்தின் 14ஆவது பௌர்ணமி கவியரங்கம் கடந்த 03.04.2015 தினத்தன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
செயலாளர் இளநெஞ்சன் முர்ஷதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மேமன்கவி செய்திருந்தார்.
வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் கவியரங்கத் தலைவர் கவிஞர் ரவூப் ஹஸீர் அவர்களைப் பற்றி கவிதையில் சிறந்த முறையில் எடுத்துரைத்தார்.
கவியரங்கு, கவிஞர் ரவூப் ஹஸீர் தலைமையில் மிகவும் சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் நடந்தது.
கவிஞர்கள் கவின்கமல், எஸ்.தனபாலன், ஈழகணேஷ், புத்தளம் கலாபூஷணம் அப்துல் லத்தீப், உடத்தலவின்ன அப்துர் ரஹ்மான், ஏ.எம்.ஆறுமுகம், டொக்டர் தாசிம் அகமது, கலைவாதி கலீல், மட்டக்களப்பு லோகநாதன், பிரேம்ராஜ், ரி.என்.இஸ்ரா, மஸீதா அன்ஸார், கவிக்கமல் ரஸீம், அலி அக்பர், வெளிமடை ஜஹாங்கீர், மாத்தளைக் கமால், இப்னு அஸூமத், உஸ்மான் மரிக்கார் ஆகியோர் கலகலப்பான, வித்தியாசமான பாணிகளின் மூலம் சபையைக் கவர்ந்தனர்.
உடுவை தில்லை நடராஜா, மானா மக்கீன், இர்ஷாத் ஏ. காதர், காத்திபுல் ஹக், எஸ்.ஐ நாகூர்கனி, எம்.எஸ்.எம்.ஜின்னா, சமூகஜோதி எம்.ஏ. ரபீக், கலாவிஸ்வநாதன், எஸ்.ஏ.கரீம், உவைஸ் ஷரீப், எஸ்எல்.மன்ஸூர், எம்.எப்.ரிபாஸ், பஸ்லி ஹமீத், நஸீம் ரிஸ்வி போன்றோருடன் பெருந்தொகையானோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
புத்தளம் கலாபூஷணம் அப்துல் லத்தீப் அண்மையில் தான் வெளியிட்ட தனது ஐந்து நூல்களை வகவத்துக்கு கையளித்தார். அடுத்த கவியரங்கத் தலைவராக கவிஞர் கவிநேசன் நவாஸ் அறிவிக்கப்பட்டார்.
.jpg)
.jpg)
.jpg)