பி. முஹாஜரீன்-
நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சக்தியாக திகழும் இளைஞர்கள் சமூதாய வளர்ச்சிக்காகவும் செயற்பட வேண்டுமென தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் பொத்துவில் பிரதேச இளைஞர் மாநாடு நேற்று (11) சனிக்கிழமை பொத்துவிலில் தேசிய காங்கிரஸின் பொத்துவில் இளைஞர் அமைப்பாளர் ஏ.ஜீ. இக்பால் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரியை பெற்றுக் கொடுத்த மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் வழியை பின்பற்றி பிரதேச வாதம் பாராது அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய காங்கிரஸ் ஒரு பலம் பொருந்திய கட்சியாக திகழும் நாடு தழுவிய ரீதியில் தேசிய காங்கிரஸ் கட்சியை புனரமைத்து வருகின்றோம்.
அந்த வகையில் இளைஞர்களாகிய நீங்கள் தேசிய காங்கிரஸின் வளர்ச்சிக்கு மேலும் உங்களது ஒத்துழைப்பை வழங்கி சமுதாயத்தின் விடிவுக்காகவும் எதிர் காலத்தில் எமது பிரதேசத்தை புதிய பாதையில் கொண்டு செல்வதற்கும் முன்வர வேண்டும்.
தற்போதைய அரசினால் மக்களுக்கு 100 நாள் திட்டத்தில் எவ்வித அபிவிருத்தியையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு ஒரு ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது என்றார்.
இந் நிகழ்வில் தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹ்ஜி, பிரதி தேசிய அமைப்பாளர் யூ.எல். உவைஸ், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.வதுர்கான் ஆகியோர் கலந்து கொண்டர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)