பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இந்தியா சென்று குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கேரள மாநிலம் குருவாயூரில் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோயிலுக்கு நேற்று காலை 11.15க்கு ரணில்விக்ரமசிங்க தனது மனைவியுடன் சென்றார்.
இதை முன்னிட்டு குருவாயூரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தரிசனம் முடித்த பின் செய்தியாளர்களிடம் ரணில்விக்ரமசிங்க கூறும்போது,
‘‘நான் இந்தியாவுக்கு எதிரான அல்லது சீனாவுக்கு ஆதரவானவனோ இல்லை. ஆனால், பிரதமர் என்ற முறையில் இலங்கையின் நலனைக் காக்க வேண்டியது என்னுடைய கடமை’’
எனக் குறிப்பிட்டதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
