முன்னாள் பொருளாதர அபிவிருத்திஅமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து நாளை மறுதினம் 21ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்றதும் 9ஆம் திகதி காலை பஷில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
மாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்லவுள்ளதாகவும், அவர் அன்றைய தினமே பாராளுமன்ற அமர்வுகளில் பங்குகொள்ளவுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
