லண்டனை உலுக்கிய மின் கசிவு- படங்கள்!

லண்டனிலிருந்து மீரா அலி ராஜாய்-
ண்டனின் ஹோல்போர்ன் பகுதியில் உள்ள கிங்ஸ்வே நடைபாதைக்கு கீழ் இருந்து வெளியேறிய மின் தீ காரணமாக அப்பகுதியில் அசாதாரண நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக அங்கு பெரும் பதட்டம் காணப்பட்டது. இந்த பகுதியை அண்மித்து காணப்பட்ட கட்டிடங்களிருந்து சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசார் அப்பகுதியை சாதாரண நிலைக்கு கொண்டு வர தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர் . மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் வரை தீயை அணைக்காமல் தீயணைப்பு துறையினர் காத்திருக்க வேண்டியதாயிருந்தது.

இச்சம்பவம் காரணமாக எந்தவொரு உயிரிழப்புகளும் ஏற்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -