தேர்தல் முறைமை மாற்றம் உட்பட 20ம் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றியதன் பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
கட்சித் தலைவர்களுடன் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார் என எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபா டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இவ் விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
