உடுகம ஸ்ரீ புத்தரக்பித்த தேரரின் மறைவுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனுதாபம்!

ஜுனைட்.எம்.பஹ்த்-
ஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்பித்த தேரரின் மறைவுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது.

நீதி, நியாயம் மற்றும் ஒழுக்கத்தை மதிக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு பாரிய பிரயத்தனத்தை முன்னெடுத்து வந்த தேரரின் மரணம் நாட்டின் முக்கிய காலகட்டத்தில் பெரிய இடைவெளியாகும்.

இவர் நாட்டில் மத நல்லிணக்கத்துக்காக ஆற்றிய சேவைகளை இத்தருணத்தில் கௌரவத்துடன் நினைவு கூருகின்றோம்.

இவரின் வழிகாட்டல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து சமாதானமான, நல்லிணக்கத்துடன் கூடிய தாய் நாட்டைக் கட்டியெழுப்பவேண்டியது, இந்நாட்டின் சகல பிரஜைகளினதும் தார்மீகப் பொறுப்பாகும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -