8ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 8 ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உட்பட எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன.
இதையொட்டி, ஒரு நாளுக்கு முன்பாக அதாவது வருகிற 7 ஆம் திகதி கோலாகலமான தொடக்க விழா, கொல்கத்தா சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் நடனமாடி கலக்க இருக்கிறார்கள். தொடக்க விழாவில் அசத்தப்போகும் பிரபலங்களின் பெயர் விவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தொடக்க விழாவிற்கான ஒன்-லைன் டிக்கெட் விற்பனை நேற்று மாலை தொடங்கியது.
