முஸ்லிம் மக்களின் உரிமையிலும் அவர்களின் பாதுகாப்பிலும் அன்று தொட்டு இன்று வரை அக்கறை செலுத்தும் ஒரே ஒரு தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களையே சாரும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மத்திய குழு செயலாளரும், சமாதான நீதவானுமான யு.எல்.எம். அபார் தெரிவித்துள்ளார். அண்மையில் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர். இதில் அவர்களின் உரிமைகள், உடைமைகள் எல்லாம் கடந்த அரசினால் பறிக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த அரசில் பல முஸ்லிம் தலைவர்கள் காணப்பட்ட போதும் அவர்கள் எல்லோரும் வாய்மூடி மௌனிகளாகவே இருந்தனர். அந்த வேளை எமது தலைவர் ரிசாத் அவர்கள் மட்டும் முன்னாள் ஜனாதிபதியுடன் நேரடியாக முரண்பட்டு மக்களுக்காக குரல் கொடுத்தார். அதனால் அவர் அந்த அரசாங்கத்தின் வெறுப்பிற்கு ஆளானார்.
அதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவைத் தோற்கடித்து முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்காக புதிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கு அடித்தளமிட்டார். இந்த மிகப்பெரும் கைங்கரியத்தினாலே தற்போது இந்த அரசாங்கத்தில் முஸ்லீம்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்.
மேலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். இம்முறை இடம்பெறும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசினை ஆதரித்து முஸ்லிம் மக்களின் ஏக தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
.jpg)