மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வியாழக்கிழமை அனுமதிப் பத்திரமின்றி மாடுகளை ஏற்றி வந்த லொறி மாடுகளுடன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதியும் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமாக ரெதிதென்ன பிரதேசத்திலிருந்து கல்முனை பகுதிக்கு லொறியில் மாடுகளை ஏற்றிச் செல்லும் வழியில் வாழைச்சேனை பொலிஸாருக்கு முன்பான கடமையிலிருந்த பொலிஸார் வாகனத்தை பரிசோதனை செய்த போதே பத்து மாடுகளும், ஒரு கன்றும் லொறியுடன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், லொறி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறியின் சாரதியை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கௌ்ளப்பட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.திப்புட்டுமுன தெரிவித்தார்.(ந-த்)
