அய்ஷத் ஸெய்னி-
பாலமுனை அல் அறபா விளையாட்டுகு கழகமானது 2014ஆம் ஆண்டு கல்விப் பொதுதராதர சாதரண தரப் பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற பாலமுனைப் பிரதேச மாணாக்கர்களை பாராட்டிக் கெளரவிக்கும் விருது விழாவொன்றை இன்று மாலை 3.30 மணியளவில் (ஏப்ரல் 25) பாலமுனை இப்னு ஸீனா ஜூனியர் வித்தியாலய அஷ்ரப் ஞாபகார்த்த ஆராதனை மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
கழகத்தலைவர் எஸ்.ஆப்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் மெளலவி அவர்கள் பிரதம அதிதியாகவும் கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர் எல்.எல்.பி, பீ.எம்.அபுல் ஹசன் உதவிக்கல்விப் பணிபுபாளர், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முன்னாலள் அதிபர் எம்.எஸ்.அப்துல் ஹபீல் மெளலவி, ஆசிரியர் கலாசாலை முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.அப்துல் லத்திப் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.(ந-த்)
