த.நவோஜ்-
அக்கறைப்பற்று ஆலயடிவேம்பு மகாசக்தி சிக்கன கூட்டுறவு அமைப்பின் 40வது விவசாயக் கடனுதவி வழங்கும் நிகழ்வு ஆலயடிவேம்பு மகாசக்தி அமைப்பின் ஒன்றுகூடல் மண்டபத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர் எஸ்.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜ சிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.இராஜேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டதுடன், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் மற்றும் கடனுதவி பெறுவோர் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது சங்கத்தின் 25 உப பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 156 உறுப்பினர்களுக்கு விவசாயத்திற்கான கடனுதவிக்கான காசோலை அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
1992ம் ஆண்டு 172 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பானது தற்போது 25 உப பிரிவுகளுடன் 2500 பெண் அங்கத்தவர்களைக் கொண்டு மிகவும் விசாலமான வளர்ச்சி நிலையைக் கொண்டுள்ளதுடன், இருக்கின்ற அங்கத்தவர்களின் நிர்வாகத்தின் அயராத உழைப்பின் காரணமாக இத்தகையதொரு நிலையை எய்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)