19வது சீர்திருத்தத்தை மனட்சாட்சிப்படி சிந்தித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்கும் முதலாவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் ஏற்பாட்டில் நேற்று (23) மாலை கொழும்பு விகாரமகா திறந்த வெளியரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவின் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்த, நிமால் சிறிபாலடி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, அத்ரலிய ரத்னதேரர், மற்றும் சோபித தேரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில் புதிய தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் வேலைத்திட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றதாகவும் இதனால் இன்று மக்கள் சிறப்பாக உள்ளதாகவும் ஐந்து நட்சத்திர ஹோட்டலை விடவும் ஏழு நட்சத்திர ஹோட்டல்கள் போன்ற ஜனநாயகத்தை மக்கள் அனுபவிக்கின்றனர் என்றும் கடந்தகால தலைவர்கள் போன்று படை பட்டாளங்களுடன் வந்து நான் செயற்பட விரும்பவில்லை. மனித நேயத்துடன் எமது கட்சி செயற்பட வேண்டும் பண்டார நாயக்கா முழுச் சுதந்திரங்களையும் வழங்கியிருந்தார் இதன் காரணமாக அவரின் உயிரைப் பலிகொடுக்கவும் நேர்ந்த விடயத்தையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.

19ஆவது மற்றும் 20ஆவது அரசியல் சீர்திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பாகவும் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் 19ஆவது அரசியல் சட்டத்தை மனட்சாட்சிப்படி சிந்தித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கையையும் விடுத்தார்.(ந-த்)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -