NFGG-
மிகவும் பின்தங்கிய புதிய காத்தான்குடி கைராத் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சைக்கு இலகுவாக முகங் கொடுக்கும் வகையில் மாதிரி வினாத்தாள் பயிற்சி வகுப்புக்களை நடாத்த NFGG முன்வந்துள்ளது.
இதற்கான ஆரம்பக் கட்ட உதவிகளை வழங்கும் வகையில் NFGG பிரதிநிதிகள் நேற்று (13.03.2015) பாடசாலைக்கு விஜயம் மேற் கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது NFGGயின் காத்தான்குடி பிரதேச தலைமைத்துவ சபை உறுப்பினர்களான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார், MACM.ஜவாஹிர், MHA.நஸீர் மற்றும் மகளிர் அணி உறுப்பினர் அனீஸா பிர்தௌஸ் ஆகியோருடன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புக்களுக்கான பரீட்சை வழி காட்டி மாதிரி வினாத்தாள் தொகுதியினைப் பெற்றுக் கொள்வதற்கான காசோலையும் நகரசபை உறுப்பினர் மிஹ்ழார் அவர்களினால் வகுப்பிற்குப் பொறுப்பான ஆசிரியரிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் வகையில் தொண்டர் ஆசிரியர் ஒருவரை விரைவில் நியமிக்கவுள்ளதாகவும் NFGG பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)