ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி கல்முனை அல்-பஹ்ரியா மகா விதியாலைய உயர்தர மாணவர்கள் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்ற சமயத்தில் மாணவியொருவர் ஓவியங்களுக்குள் தனது பெயரை பதிப்பதற்கு முயற்சித்த குற்றத்திற்ககாக தொல்பொருள் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலீஸ் நிலையத்தில் ஓப்படைக்கப்பட்டிருந்தார்.
புராதண ஓவியங்களை மையினால் எழுதி சேதப்படுத்துவது தண்டனைக்குறிய குற்றம் என்ற ரீதியில் குறித்த மாணவி நீதி மன்றதில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வாய்ப்பு அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில் அச்சம்பவம் ஹரிஸ் எம்.பியின் கவனதுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து உடன் செயற்பட்ட ஹரிஸ் எம்.பி. குறித்த பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு மாணவியை விடுதலை செய்யுமாறு கோரியும் விதலை செய்வதற்கு பொலிசார் மறுத்ததினை தொடர்ந்து நின்று விடாமல் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஜானக பண்டார தென்னகோன் ஆகியோர்களது கவனத்துக்கு கொண்டுவந்தும் கைகூடாத நிலைமையே காணப்பட்டது.
ஆனால் சமூகத்துக்காக முன்வைத்த காலை பின்வைக்க விரும்பாத ஹரீஸ் எம்.பி அமைச்சர் ஜகத்பாலசூரியவை தொடர்பு கொண்டதன் பலனாக மரபுரிமைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு குறித்த மாணவியை விடுதலை செய்யுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். அத்தோடு நின்று விடாமல் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கவனத்துக்கும் கொண்டுவந்தனை அடுத்து பசில் ராஜபக்ஸ்சவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று சிகிரீயாவுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு குறித்த மாணவியின் விடுதலைக்காக கலந்துரையாடி மாணவியை விதலை செய்தார்.
ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் 15ம் திகதி மட்டகளப்பு, சித்தாண்டியைச் சேர்ந்த தனியார் கைத்தொழில் நிறுவனமொன்றில் கடமையாற்றும் 28 வயதுடைய யுவதி ஒருவர் வார விடுமுறையின் போது சக ஊழியர்களுடன் தம்புள்ள சிகிரியா பிரதேசத்துக் சுற்றுளா சென்றிருந்த சமயம் தனது தலைமுடி கிளிப்பை பயண்படுத்தி சுவரோவியத்தின் மீது எழுதிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தம்புள்ள நீதவான் உதய சஞ்ஜீவ குமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை 2ம் திகதி குறித்த வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்குறிப்பிட சித்தாண்டியை சேர்ந்த யுவதிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களையும் பார்க்கும் போது அன்று கல்முனை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மானத்தையும், குறித்த கல்முனை மாணவியின் எதிர்கால வாழ்க்கையையும், கல்முனை அல்-பரிய பாடசாலையின் கெளரவத்தையும் பாதுகாப்பதற்காக ஹரிஸ் எம்.பியினால் எடுக்கப்பட்ட முயற்சியானது கல்முனை வாழ் முஸ்லிம் சமூகத்தின் கெளரவம் மட்டுமல்லாது முழு இலங்கை வாழ் முஸ்லிம் மாணவிகளினதும், முஸ்லிம் சமூகத்தினதும் கெளரவமும், மானமும் என்பதே எனது கருத்தாக இருக்கின்றது.
இந்த வகையில் ஹரிஸ் எம்.பி. அவர்கள் அன்று துணிச்சலுடனும், குறிப்பிட்ட விடயத்தில் சறுக்கல்கள் நேர்ந்த போதும் சோர்ந்து விடாமல் தனக்கு வாக்களித்த பிரதேசத்தில் வசிக்கின்ற சகோதரியின் வயிற்றில் பிறந்த மாணவியின் கெளரவம் காற்றில் பறந்து விடக் கூடாது என்ற காரணத்தினால் தனது முயற்ச்சியில் வெற்றி கண்டு குறித்த மாணவியை அழைத்து வந்து பாடசாலை அதிபரிடம் ஓப்படைத்ததை பார்க்கும் போது பெரும் தலைவர் அஸ்ஸஹீத் அஸ்ரஃப் அவர்களின் பாசரையின் சமூகத்துக்காக வளர்க்கப்பட்ட தூர நோக்கு சிந்தனையுடையுடன் இலங்கை வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்துக்காகவும் கல்முனை மண் ஈன்றெடுத்த அரசியல் சானக்கியமிக்க அரசியல்வாதியாகவே நான் சகோதரர் சட்டத்தரணி ஹரிஸ் எம்.பியை பார்க்கின்றேன்.
.jpg)
.jpg)