முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருக்கு எதிராக புத்திக்க முறைப்பாடு!

அஸ்ரப் ஏ சமத்-

முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருக்கு எதிராக பாரளுமன்ற உறுப்பிணர் புத்திக்க பத்திரண இலஞ்ச ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு முன்னாள் அமைச்சர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்புத் திணைக்களத்தில் - சிலிங்கோ பில்டர் சொசைட்டி சங்கங்கள் ஊடாக அவர்களது கம்பணியில் வீடுகளைப் பெற்றவர்கள் தமது மாதாந்த கொடுப்பணவை வீடமைப்பு திணைக்களத்திலேயே செலுத்தல் வேண்டும். 

இப்பணத்தினை திணைக்களத்திற்குச் செலுத்தாமல் மேஜ்ஜன்ட் வங்கியின் முன்னாள் தலைவர் ஊடக அவரது பெயரில் இப் பணம் முதலிட்டு அப்பணத்தினை அவர்கள் பெற்றுள்ளதாக இன்று மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணர் புத்திக்க பத்திரண இலஞ்ச ஆணைக்குழு முன் தமது முறைப்பாட்டைக் கையளித்தார். 

அதன் பின் பாராளுமன்ற உறுப்பிணர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள கொமசாரிஸ் ஆணையாளர் பதவியை முன்னாள் அமைச்சரின் கட்சியின் அங்கத்தவரான ஒரு சட்டத்தரணிக்கே அப்பதவி அமைச்சரவை அனுமதிபத்தரிம் பெற்று வழங்கப்பட்டது. அவர் தற்பொழுது அக் கடமையில் இருந்து 3 வாரங்களுக்கு முன் விலக்கப்பட்டுள்ளார். ஆனால் சிலிங்கோ பில்டர் சொசயிட்டி, நேசம் பில்டிங் கம்பணிகளில் வீடுகள் பெற்றவர்கள் தமது வீடுகளை வீடமைப்புத் திணைக்களத்தில் பதிதல் வேண்டும். 

அதற்கான கொடுப்பணவுகளையும் திணைக்களத்திற்கே செலுத்தல் வேண்டும். என்ற நியதி உள்ளது. அவர்களது வீட்டுக்கான உரிமைப்பத்திரம் வழங்கும் பொறுப்பும் வீடமைப்பு கொமசாரிடமே உள்ளது. 

ஆனால்; இதற்குரிய சகல செலுத்தல்களும் தணியார் ஒருவரின் வங்கியில் இடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிணர் புத்திக்க பத்திரன இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இத் தகவல்களைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -