த.நவோஜ்-
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் சனிக்கிழமை நண்பகல் வேளை ஆட்டோவும் பஸ் வண்டியும் மோதியதில் ஆட்டோ சேதமடைந்ததுடன், ஆட்டோ சாரதியும் காயமுற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னால் சென்ற மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சாலைக்குரிய பஸ் வண்டியானது குறித்த வீதியில் பயணிகளை இறக்கும் நடவடிக்கைக்காக நிறுத்தும் போது பின்னால் வந்த ஆட்டோவானது பஸ்ஸின் பின் பகுதியில் முட்டி மோதியதினால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
இதன்போது காயமுற்ற ஆட்டோ சாரதியான கும்புறுமூலை வெம்பினை சேர்ந்த ஆர்.ரவின்சன் வயது (26) என்பவர் சிறு காயமுற்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)