ஜேர்மனியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப்(முகம் தெரியும்படியாக அணியும் முக்காடு) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் முஸ்லிம் ஆசிரியை ஒருவரின் வேலை விண்ணப்பம் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த ஆசிரியை தொடர்ந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி, குழப்பத்தை ஏற்படுத்தும் உறுதியான நிலைமை இருந்தால் மட்டுமே மத அடையாளங்களை தடைசெய்ய முடியும்.
ஆனால் ஹிஜாப் அணிவதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என்பதால், அதற்கு அனுமதியளிக்கப்படும் என தீர்ப்பளித்துள்ளார்.
இதுகுறித்து அந்நாட்டின் பசுமை கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், பன்முகத் தன்மையை எதிர்ப்பவர்களை விட, முக்காடு அணிவது ஜேர்மனிய சமூகத்துக்கு பெரிய பாதிப்பாக அமையாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு மத சுதந்திரத்துக்கான நன்னாள் எனவும் கூறியுள்ளார்.
