இந்திய பிரதமரைச் சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழு -படங்கள்





ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் உயர் மட்டக்குழுவினர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து அதிகாரப் பகிர்வு, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் என்பன உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
அமைச்சர் ஹக்கீமுடன் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸனலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கட்சியின் வெளிவிவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

கிழக்கு மாகாணத்தில் விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவித்தல், தென்கிழக்கு, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் பீடங்களை நிறுவதற்கும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் உதவி வழங்கள் போன்றவற்றுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைக்குமென்று பிரதமர் மோடி தூதுக்குழுவினரின் வேண்டுகோள் சிலவற்றுக்கு பதிலளிக்கும் போது குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முயற்சியினால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து இந்தியப் பிரமதர் மோடி தம்மைச் சந்தித்த தூதுக்குழுவினரிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சந்திப்பின் இறுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், தமது குழுவினரின் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக் கூறினார்.

டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -