எம்.எம்.ஜபீர்-
சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்று சென்ற உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வு 12 கொளனி 1 வட்டாரத்திலுள்ள கபூரின் தோட்ட வளாகத்தல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், கணக்காளர் எம்.எம்.உசைனா, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஜி.ஏ.நஜீம் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)