எம்.ஏ. தாஜகான்-
மாகாண குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழான தூய பசும்பால் நுகர்வை பாடசாலை மட்டத்தில் மேம்படுத்தல் திட்டத்தில் பொத்துவில் உப வலயத்தின் அல்- இர்பான் மகளிர் கல்லூரிக்கான பசும்பால் சூடாக்கி இயந்திரமொன்று இன்று (24) பொத்துவில் கால்நடை வைத்திய காரியாலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பொத்துவில் கால்நடை வைத்திய அதிகாரி எச்.எல்.சமான்மதி, கால்நடை வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. கைதர் அலி, ஆகியோர் கலந்து கொண்டு இயந்திரத்தை அல் இர்பான் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.எல். கமறுதீன் அவர்களிடம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)