தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலருக்கு எதிராகவும் ஊழல் மோசடி குற்றச்சாட்டு!

ற்போதைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலருக்கு எதிராகவும் ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு அறிவித்துள்ளது. 

முறைப்பாடு செய்யும் தினத்தில் குறித்த அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அம்பலப்படுத்தப்படும் என அமைப்பின் உறுப்பினர் நிசாந்த சிறிவர்னசிங்க தெரிவித்துள்ளார்.

அறுபது நாள் ஆட்சிக் காலத்தில் நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து இந்த அமைச்சர்களுக்கு எதிராக பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யும் நோக்கில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த 15 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் 200 முறைப்பாடுகள் விரைவில் செய்யப்பட உள்ளதாக நிசாந்த சிறிவர்னசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -