பைரூஸ் ஹாஜியின் தலைமையில் 5000 புதிய அங்கத்தவர்கள் ஐக்கியதேசிய கட்சியில் இணைவு-வீடியோ

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய கொழுப்புக்கான பிரதான அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியின் தலைமையில் மத்திய கொழும்ப்பு புதுக்கடையை அண்டிய பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை (15.03.2015) 5000க்கும் அதிகாமான புதிய அங்கத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

ஐக்கிய தேசியக்கட்ட்சியின் மத்திய கொழும்புக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ்வைபவத்தில் பைரூஸ் ஹாஜியின் தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகாமான ஆதாரவாளர்களின் ஒத்துளைப்புடன் புதுக்கடையினையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் ஊர்வளமாக சென்ற வேலையிலே இவ்வாறு 5000க்கும் அதிகமான புதிய அங்கத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மத்திய கொழும்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 80000 வாக்குகளால் வெற்றியடைவதற்கு பைரூஸ் ஹாஜியின் அர்ப்பணிப்பு, விடாமுயற்ச்சியுடனான தேர்தல் பிரச்சாரங்களுமே முக்கிய காரணமாக அமையப் பெற்றிருந்தமையே இன்று மேலும் மத்திய கொழும்பு மக்கள் அவர் மேல் வைத்திருக்கின்ற மரியாதையின் காரணமாக 5000க்கும் அதிகப்படியான புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனதனை அவதானிக்க கூடியதாக இருந்தது. இப்புதிய அங்கத்தவர்களை சேர்க்கும் இவ் ஊர்வளத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான பாஹிம், இக்பால் ஹாஜி ரஃமான், விக்னேஸ், ஆகியோருடன், பிரதேசத்தின் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட பைரூஸ் ஹாஜி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்….
ஐக்கிய தேசியக் கட்சியில் மத்திய கொழும்பில் இருக்கும் அங்கத்தவர்களை அதிகரிக்கும் முகமாக நாங்கள் இன்று பாதைக்கு வந்து மக்களிடத்தில் விளக்கிய பொழுது மக்கள் மிகவும் உற்சாகமாவும், ஆர்வத்துடனும் 20ரூபாவினை கட்சியின் வளர்ச்சி நிதிக்காக செலுத்தி புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனதனை பார்க்கும் பொழுது நூறு நாள் வேலைத்திட்டத்தில் 65 நாட்களே முடிவுற்றிருக்கும் நிலையில் மத்திய கொழும்பில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை அதிகரித்துக் கொள்ளும் விழிப்புணர்ச்சியுடன் மக்கள் ஆர்வத்துடன் புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொண்டுள்ளதாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

அத்தோடு எனது 30வருட அரசியல் வாழ்க்கையில் இன்று மக்கள் ஆர்வத்துடன் பணத்தினை செலுத்தி புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொண்டமையானது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அதே இடத்தில் புதுமை தரும் விடயமாகவும் உள்ளது.

மேலும் நான் ஊறுதிப்பட தெரிவிக்க விரும்புவதாவது அடுத்த பொதுத்தேர்தலில் அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு மத்திய கொழும்பில் அதிகப்படியான ஆசனங்கள் கிடைக்கும் எனவும், கடந்த ஜனாதிபதி தேர்தலை விடவும் மத்திய கொழும்பிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சியானது ஆதிகப்படியான வாக்குகளைப் பெறும் அதே நேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் தனது ஆசனங்கலை பதின்னான்காக அதிகரித்துக் கொள்ளும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் எனக் கூறினார்.

இம்முறை பொதுத்தேர்தல் பிற்போடப்படுமா என வினவிய போது அதற்க்கு பதிலளித்த பைரூச் ஹாஜி… இது சம்பந்தமாக இன்றும் அமைச்சரவை உடனடியாக கூடி கலந்தாலோசிக்கின்றது. 

எது எவ்வாறாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான நோக்கமானது வருகின்ற ஏப்ரல் பதிமூன்றாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்துவதாககும். அதுவே ஐக்கிய தேசியக்கட்சி மக்களுக்கு கொடுத்த வக்குறுதியுமாகும். 

நாங்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் செயற்படுத்தியவைகளையும் மக்கள் விரும்புகின்றனர். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தலை பிற்போடும் எந்தவிதமான என்னங்களும் கிடையாது எனத் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -