எனது உயிருக்கு அச்சுறுத்தல்- கோத்தபாய ராஜபக்ச

னது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே மற்றும் சில தரப்பினரும் உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

என்னைக் கைது செய்யப் போவதாக சிலர் கூறி வருகின்றனர். இதனால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. நான் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதில்லை.

எந்த அதிகாரத்தைக் கொண்டு என்னைக் கைது செய்யப் போவதாக அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அமெரிக்க குடியுரிமை காணப்படுகின்றது. எனினும், நான் அங்கு சென்றால் நிச்சயமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்.

அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் துரத்தி துரத்தி துன்புறுத்தி வருகின்றது.

நான் எந்தக் காலத்திலும் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராக இருந்ததில்லை. எனினும், தற்போதைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அரசியல் கட்சியொன்றில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டு அரசியலில் ஈடுபட நேரிடலாம் என வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு கோத்தபாய ராஜபக்ச நேர்காணல் வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -