முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கையொப்பம் சேகரித்த இடத்திற்கு இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சுத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரி அட்டன் பஸ் தரிப்பிடத்தில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
இதன் போது அதிகமானவர்கள் கையொப்பம் இட்டனர்.
இந்நிலையில் மக்கள் கையொப்பம் இடும் போது இனந்தெரியாதவர்களால் கையொப்பம் இடும் இடத்திற்கு கல் எரியப்பட்டதாக முன்னால் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.