சிங்கள மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுகின்றனர் -பைரூஸ் ஹாஜி



அஷ்ரப் ஏ சமத்-

ண்டன் நகரில் முஸ்லிம்களை சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரி முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை திரிபு படுத்தி சிங்கள மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருவதாக மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் புதுக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர் ....

கடந்தவாரம் இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களை சந்தித்திருந்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ஆட்சி மற்றம் ஏற்பட முஸ்லிம் மக்கள் முழு மூச்சுடன் தனக்கு வாக்களித்ததாக நினைவுகூர்ந்த அதேவேளை தமது பிரசார கூட்டங்களுக்கு முஸ்லிம் மக்கள் அலைகடலென திரண்டமை ஒரு வரலாற்று நிகழ்வு என்ற ரீதியில் குறிப்பிட்டிருந்தார் .

குறித்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய உரையின் வீடியோ ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்துவரும் பொதுபல சேனா என்ற பெயரில் இயங்கிவரும் சில முகப்பக்கங்கள் மற்றும் சில செய்திதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள அதேவேளை பெரும்பான்மை சகோதரர்கள் ஜனாதிபதியின் இந்த கருத்துக்களுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

தமிழ் மக்களை சந்திக்காமல் முஸ்லிம்களை மட்டும் ஏன் ஜனாதிபதி சந்திக்க வேண்டும் என்ற ரீதியில் விமர்சனம் செய்துள்ளனர்.

மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக ஆனபிறகு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதாக நாம் கருதிக்கொண்டாளும் மறைமுகமாக சில இனவாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பாக கடுமையான இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த ஆட்சியிலும் பொலன்னறுவையில் கலாசார மத்திய நிலையம் ஒன்று கட்ட அனுமதிமறுக்கப்பட்ட சமூகமாக வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக இனத்துவேசத்தை வளர்த்து வரும் சில விசமிகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரவேண்டும் என அவர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருக்கு நேரடியாக தான் சுட்டிக்கட்டியுள்ளாதாக குறிப்பிட்ட அவர் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஊடக கண்காட்சிகளை நிறுத்திவிட்டு சமூகத்துக்கு ஆக்கபூர்வமாக எதாவது செய்ய முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.

நாட்டில் ஆட்சி செய்தாலும் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மையாக இருப்பது சில விடயங்களை முன்னெடுப்பதில் சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -