அஷ்ரப் ஏ. சமத்
பேருவளை சீனன்கோட்டையில் 80 இலட்சம் ருபா செலவில் ஆரம்பப் பாடசாலைஒன்றை சுகாதார அமைச்சரும் பேருவளை ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளருமான டொக்டர் ராஜித்த சேனாரத்தின திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணர் எம். எம். அஸ்லம், முன்னாள் மாகாணசபை உறுப்பிணராண அம்ஜத்தும் கலந்து கொண்டார்.
இங்கு உரைறயாற்றிய அமைச்சர் ராஜித்த – மைத்திரிபால அரசாங்கம் ஒருபோதும் சிங்கள இனத்துக்கு ஒரு பார்வையும் தமிழ் முஸ்லீம் இனத்துக்கு இன்னொரு கடைக்கண் பார்வையைப் பார்ப்பதில்லை. எல்லா இனத்துக்கும் ஒரே சமமான பார்வையாகும். கடந்த காலத்தில் பேருவளைத் தொகுதி முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் காலத்தில் இருந்து ஜ.தே.கட்சியின் கோட்டையாகத்தான் இருந்தது.
அதனை முன்னாள்; ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் பல தேர்தலில் இம்பிரதேசத்தின் மக்களை 70வீத சுதந்திரக்கட்சிக்காரர்களாக ஆக்கி வாக்கு பெற்றுக்கொடுத்தேன். ஆனால் அவரது காலத்தில் இனவாதம் பெருகியது. அதற்கு நான் எதிரானவன் இனங்களுக்கிடையே பிரச்சினை எழும்போது அதற்கு எதிராக குரல் கொடுப்பவன் நானாக முதலில் இருந்தேன். கடந்த அளுத்கம சம்பவம் இந்த நாட்டில் சிறுபாண்மை மக்களது வெகுவாக பாதித்தது. அதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுடனும் அவாகள் இயக்கிய பொதுபலசேனா இயக்கத்துக்கு எதிராகவும் விமர்சனம் செய்து செயல்பட்டேன்.
நான் மகிந்தராஜபக்சவை உதறித்தள்ளிவிட்டு மைத்திரிபால சிறிசேனாவினை ஜனாதிபதியாக்க நான் பாடுபட்டதும் இந்த நாட்டில் உள்ள சகல முஸ்லீம் பிரதேசங்களும் மைத்திரிபாலவுக்கு 90வீதமாக வாக்களித்திருந்தனர்.
அதே போன்றுதான் கிழக்கு வடக்கு மக்களும் 90வீதமானவர்கள் மைத்திரிபாலசிறிசேனாவுக்கு வாக்களித்தனர். என அமைச்சர் ராஜித்த உரையாற்றினார்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)