தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்திற்கு வர்ணப்பூச்சு கையளிப்பு!




வுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் கட்டடங்களின் புனரமைப்புக்காக பாடசாலை அதிபர் திரு.எஸ்.வரதராஜா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வர்ணப்பூச்சு இன்று வெள்ளிக்கிழமை (06.03) காலை 10.00 மணியளவில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து பாடசாலையின் பௌதீக வளர்ச்சி தொடர்பாகவும் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இவ் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை அதிபர் திரு.எஸ்.வரதராஜா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடக இணைப்பாளர் திரு.ம.சஞ்சீவன், செயலாளர் திரு.ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு.த.நிகேதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -