மஹியங்கனை புனித பூமி பிரதேசத்தில் அமைந்துள்ள கடையின் யன்னல் கதவினை உடைத்து உட்புகுந்த திருடன் ஒருவன் அங்குள்ள பெறுமதிமிக்க பொருட்களை இரு பைகளில் பொதி செய்துவிட்டு குளிர்பானமொன்றை அருந்திய நிலையில் கதிரையிலிருந்தவாறே நித்திரை கொண்டான்.
மறுதினம் காலை கடை உரிமையாளர் வந்து கடையைத் திறத்தபோது கடைக்குள் திருடன் உட் புகுந்திருப்பது தெரிய வந்தது.
கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது அங்கு ஒருவர் பொருட்கள் பொதி செய்த நிலையில் நித்திரை கொண்டிருப்பதைக் கண்டார்.
உடனடியாக கடை உரிமையாளர் சம்பவம் குறித்து மகியங்களைப்பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்தார். இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் திருடனை தட்டி எழுப்பி கைது செய்தனர்.
திருடனினால் பொதி செய்யப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட திருடன் பிரபல கேடி என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரனையின் போத தெரியவந்துள்ளது.metronews
