பாறுக் சிகான்-
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலியோயா பரணகம பிரதேசத்தில் அமைந்துள்ள கஜபாபுர பாடசாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இப்பாடசாலையின் கட்டடத்தை வட மாகாண சபை உறுப்பினர்களாக ரிப்கான் பதியுதீன் மற்றும் ஜெயதிலக ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன் போது அதிபரின் வேண்டு கோளுக்கு அமைய பாடசாலையின் மின்சார வசதிக்கான ஏற்பாடுகளும் மாகாண சபை உறுப்பினர்களால் சொந்த நிதியில் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர இப்பாடசாலை நிர்மாணிப்பிற்கான முயற்சியினை அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேற் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப் பாடசாலைக்கு தேவையான வசதிகள். குறை நிறைகளை கேட்டறிந்த ரிப்கான் பதியுதீன் இனி வரும் காலங்களில் குறித்த பாடசாலை குறித்து விசேட கவனம் செலுத்துவதாக பாடசாலை சமூகத்திடம் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)