ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
நம் நாடு நற்பணிப் பேரவை ஏற்பாட்டில் நகைச்சுவை சங்கம் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (5) மாலை கொழும்பு-3, ஆனந்த குமாரசாமி மாவத்தை, இலக்கம். 46 இல் உள்ள புரவலர் ஹாசிம் உமர் இல்லத்தில் நடைபெற்றது.
இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்நகைச்சுவை சங்கமத்திற்கு தொழில் அதிபரும் இலக்கிய வித்தகரும் நகைச்சுவை பிரியருமான தெ.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கு பிடித்தமான நகைச்சுவைகளை சொல்லி மகிழ்வித்தனர்.
எதிர் வரும் காலங்களில் இவ்வாறான நகைச்சுவை சங்கமம் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் பிற்பகல் 4.00 மணிக்கு நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)