இக்பால் அலி-
குருநாகல் மாவட்டத்தில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு சந்தர்ப்பவாதிகள் ஈடுபடுவதாக குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார் விசனம்.
குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் கடந்த காலங்களில் விட்ட தவறை எதிர்வரும பொதுத் தோதலின் போது விடக் கூடாது என்ற நிலையில் சகல முஸ்லிம் மக்களும் ஒன்று பட்டு பொது வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதி நிதிகளை களமிறக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுடைய ஒற்றுமையை சீர்குலைத்து குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் என்று குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு குருநாகல் மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் ஒன்று பட்டு நூற்றுக்கு தொன்னூறு விகிதத்திற்கு மேலாக தங்களுடைய வாக்குப் பதிவுகளைச் செய்திருந்தார்கள். இந்த ஒன்றுமையைத் தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தோதலிலும் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் காட்டுவதற்குத் தயாராகவுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் சந்தப்ப வாதக் கட்சிக்காரர்கள் இந்த திட்டத்தை சிர்குலைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களில் தன்னுடைய அரசியல் செல்வாக்கு சரிந்து வருகின்ற நிலையில் குருநாகல் மாவட்டத்திற்கு வருகை வந்து அரசியல் சூழ்ச்சிகளைச் செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக சத்தார் தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தலுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்த மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்திலிருந்து ஒரு தடவைதான் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றம் சென்றுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் எமது மாவட்டத்திலிருந்து செல்வாக்குமிக்க ஒரு கட்சி சார்பாக ஒருவரையோ அல்லது இருவரையோ பாராளுமன்றம் கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற நிலையில் தற்போது கட்சி வேறுபாடுகளை மறந்து மக்கள் பேசி வருகின்றனர்.
அதுவும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சஹாப்தினோ அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸியிலுள்ள ரிஸ்வி ஜவஹர்ஷாவோ அல்லது முஹமட் ரிபாழோ அலவி அல்லது நஷீர் அல்லது வேறு எவரோ இருந்தாலும் சரி ஒரு பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் சிந்தித்து இம்முறை குருநாகல் மாவட்ட முஸ்லிம் மக்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முனைப்புடன் உள்ளனர்.
இந்த மாவட்டத்தில் சந்தர்ப்பவாதக் கட்சிக்காரர்களை களமிறக்கி இங்குள்ள வாக்குகளை சிதறடிக்கச் செய்து இம்மாவட்டத்திலுள்ள அரசியல் பிரதிநிதித்துவங்களை இல்லாமற் செய்வதற்கு இந்தக் கட்சியின் தலைவர்கள் அரசியல் காய் நகர்த்தலைச் செய்து வருகின்றார்.
அதேவேளை குருநாகல் மாவட்ட முஸ்லிம் மக்கள் சிங்களப் பெரும்பான்மையின மக்களுடன் பரஸ்பரமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் அவர்களுடைய அரசியல் பிரமுகர்களுடன் மிக நெருக்கமான உறவையும் கொண்டுள்ளனர். தேர்தல் காலங்களில் தங்களுடைய விருப்பு வாக்களில் அவர்களுக்கும் ஒரு புள்ளடியை இடுகின்றார்கள். தங்களுடைய ஊர் விவாகரங்கள் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள், தொழில் வாய்ப்புக்கள் ஆகிய விடயங்கள் ரீதியாக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மாவட்டத்தில் கடந்த காலத்தில் பொதுபல சேனவின் பிரச்சினைகள் உக்கிரமடைந்திருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் பெரிய அமைச்சர்களாக இருநதார்கள் ஆனாலும் ஜனாதிபதிக்கு பயந்து எவரும் வாய் திறக்கவில்லை ஆனால் ஜனாதிபதியுடன் எமது முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக நான் துணிந்து கதைத்துள்ளேன். இது தொடர்பான செய்திகள் அன்று ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்டன.
இம் மாவட்டத்தில் இந்தக் கட்சிக்காரர்களுக்கு பின்னால் தங்களுடைய சுய இலாபங்களுக்காக செல்லும் ஒரு சிலர் உள்ளனர். இவர்கள் இந்த அரசியல் சூழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோளாகும்.
குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களுடைய ஒற்றுமையை சீர்குலைக்காமல் தங்களுடைய பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகளைப் பற்றி கனவம் செலுத்துமாறும் அங்குள்ள அரசியலைச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம். அதே போல் நாங்கள் கட்சி வேறு பாடுகளை மறந்து எல்லோரும் ஒன்றுபட்டு பொது வேட்பாளர்களை களமிறக்கி குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநித்துவங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சி செயவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
