உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது காலிறுதிப் போட்டி இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே சிட்னியில் நடை பெறுகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன் படி களம் இறங்கிய அந்த அணி 36.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணிக்கு சங்கக்கார அதிகூடிய ஓட்டங்களாக 45 ஓட்டங்களை பெற்றார். இந்த நிலையில் சங்கக்கார ஆட்டமிழந்த போது சிட்னியில் மழை குறுக்கிட்டதால் காலிறுதிப்போட்டி தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
காயமடைந்த இலங்கை அணி வீரரான ரங்கன ஹேரத்துக்கு பதிலாக இன்றைய போட்டியில் தரிந்து கௌஷால் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் இன்றைய போட்டியில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
தென்னாபிரிக்க அணி சார்பாக Imran Tahir மற்றும் JP Duminy தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதேவேளை இன்றைய போட்டியில் JP Duminy ஹட்ரிக் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
