I LOVE U சொன்ன 7 வார குழந்தை - வீடியோ இணைப்பு!

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது தமிழ் பழமொழி. அதை நிரூபிப்பது போல் லண்டனின் வட மேற்கு பகுதியில் உள்ள கில்பர்னில் வசித்து வரும் அலி சுபி என்கிற 25 வயது இளைஞருக்கு கடந்த 7 வாரங்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தையும் தெய்வ குழந்தையோ என எண்ண தோன்றுகிறது.

பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு வருடத்திற்கு பிறகு தான் பேச ஆரம்பிக்கும் என்பது தெரிந்த கதை தான். ஆனால் சுபியின் குழந்தையோ, ஏழே வாரத்தில் ஐ லவ் யூ எனக் கூறி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு நாள் மதியம் தனது குழந்தை லிட்டில் அரியானா சுபியை, அவரது தந்தை தூங்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது குழந்தையிடம் ஐ லவ் யூ என்ற வார்த்தையை அவர் கூற, ஆச்சர்யப்படுத்தும் வகையில் குழந்தையும் ஐ லவ் யூ என திரும்ப கூறியது.


அலி சுபியின் மனைவி பாத்திமாவோ, நடந்த சம்பவம் அனைத்தையும் சுபி கூறிய போது அவர் நகைச்சுவை செய்வதாக தான் முதலில் கருதினார். ஆனால் அதன் பின்னர் குழந்தை பேசும் ஒளி நாடாவை கண்டதும் பாத்திமா மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தற்போது பிறந்து 12 வாரங்கள் ஆன பின்பும், குழந்தை தொடர்ந்து தனியாக பேச முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. 



 


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -