எஸ். எம். சன்சீர்-
சுவாட் அமைப்பின் ஏற்பாட்டுடனும், இறக்காமம் பிரதேச செயலகத்தின் அனுசரனையுடனும் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை இனங்கானும் நோக்கில் இன்று காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை நடமாடும் சேவை நடைபெற்றது.
இன் நிகழ்வில் எம். மொஹம்மட் சஹா (அபிவிருத்தி உத்தியோகத்தர் வௌிநொட்டு வேலைவாய்ப்பு அமைச்சு) ஐ.எல்.அஐ்மல் (அபிவிருத்தி உத்தியோகத்தர் வௌிநொட்டு வேலை வாய்ப்பு அமைச்சு) மற்றும் சுவாட் அமைப்பின் உறுப்பினர்களான ஐ. எம். இல்மி (ஸ்வாட் அமைப்பின் வௌிக்கள உத்தியோகத்தர்) ஏ.எல்.எஸ். நிலுஜா (சமூக அணிதிரட்டல் உத்தியோகத்தர்) எம்.ஏ.எல். நபீலா (சமூக அணி திரட்டல் உத்தியோகத்தர்) கலந்து கொண்டு வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக வௌிநாடு சென்று குறிப்பிட்ட பயனடையாத, குறித்த ஒப்பந்த காலங்கள் முடிவடைந்தும் நாடு திரும்ப முடியாதவர்கள் ஒப்பந்தம் செய்து சென்ற தொழில் ஊதியம் என்பவை முறையாக கிடைக்காதவர்கள் போன்றவர்களின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதில் கிடைக்கப்பெற்ற 24 முறைப்பாடுகளில் சட்டத்தரணியன் உதவி தேவைப்படும் முறைப்பாடுகளுக்கு இலவசமாக சட்டத்தரணிகளின் உதவி பெற்றுக்கொடுக்கவும் மேலதிக முறைப்பாடுகள் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு வெகு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்டும் என தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)