மூதூர் பிரதேச சபையின் புதிய கட்டிடம் முதலமைச்சரால் திறந்துவைப்பு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச சபைகளுக்கான புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில் பிரதேச சபைகளின் ஆட்சி முடிவுறும் இறுதிக்காலமாக இருக்கின்ற இவ்வேளையில் மூதூர் பிரதேச சபையின் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.

இன்று 30 மூதூர் பிரதேச சபையின் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ம்.ஹரீஸ் தலைமையில் காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம்.லாஹிர் இவர்களுடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் ,பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.


40 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இப்பிரதேச சபை கட்டிடமானது புரநெகும திட்டத்தினால் கொண்டு வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -