ஜுனைட்.எம்.பஹ்த்-
கடந்த 2014ம் ஆண்டு நடந்த க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இதுவரை கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் ஒன்பது A தர சித்தியுடன் ஒன்பது மாணவிகளும், மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஒன்பது A தர சித்தியுடன் மூன்று மாணவிகளும் அல்ஹிறா வித்தியாலயத்தில் ஒன்பது Aதர
சித்தியுடன் இரண்டு மாணவர்களும் அல் அமீன் வித்தியாலயத்தில் ஒன்பது A தர சித்தியுடன் ஒரு மாணவியும் மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர்.
இது தவிர பரவலாக 08A,B பெறுபேறுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு சித்தியடைந்த அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள்,அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இதே போன்று ஏறாவூர்,ஓட்டமாவடி பிரதேசங்களில் 09A,08A,B போன்ற சிறந்த பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும்,பெற்றோர்கள்,அதிபர்கள்,ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
அதே நேரம் உயர்தரம் கற்பதற்கு குறைவான பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் எனது வருத்தத்தினை தெரிவிப்பதோடு அவர்கள் சோர்ந்து விடாமல் மீண்டுமொரு முறை க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்கு தோற்றி நல்ல பெறுபேறுகளை பெற்று உயர்தர கல்வியினை கற்பதற்கு வாழ்த்துகிறேன்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இதே போல் கிழக்கு மாகாணத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும் ஒட்டுமொத்தமாக நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.