சம்மாந்துறை மக்களின் பாராளுமன்ற கனவை சட்டத்தரணி முஸ்தபா நிவர்த்திப்பாரா....?

எம்.வை.அமீர் -
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சம்மாந்துறை பிரதேசசபை தவிசாளருமான, ஏ.எம். நௌசாத் அவர்களின் பாராளுமன்ற பிரவேசத்தின் பின்னர், மிக நீண்ட காலமாக சம்மாந்துறைத் தொகுதி தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்து வருவது, சம்மாந்துறை மக்களுக்கு ஆறாத்துயராகவே இருந்து வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தனித்து நின்று பெறக்கூடிய வாய்ப்பு சம்மாந்துறை தொகுதி மக்களுகே காணப்படுகின்ற போதிலும் குறித்த வாய்ப்பை சம்மாந்துறை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வில்லை என்பது வருத்தம் தரும் உண்மையாகும். 

சம்மாந்துறை மக்கள், பாராளுமன்ற தேர்தல்களை சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில், சரியான திட்டமிடல் இல்லாமல் போட்டியிடும் அனைவருக்கும் தங்களது வாக்குகளை பிரித்துப் போடுவதாலும் ஒரே கட்சியில் ஒன்றுக்கு மேற்பட்டோர் களத்தில் குதிப்பதாலுமே பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இழந்து வருகின்றனர்.

தற்போது கூட சம்மாந்துறைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றே ஆகவேண்டும் என்பதற்காக சம்மாந்துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்களினாலும் கட்சிகளாலும் தனிப்பட்ட நபர்களைனாலும் முன்னெடுப்புகள் பல செய்யப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான முன்னெடுப்புகள் ஆரோக்கியமானதாக அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. சம்மாந்துறை மக்கள் சுயட்சையாக நபர்களை களத்தில் இறக்கி அதனுடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறத் தவறிய சந்தர்ப்பமும், அனுபவமும் இருப்பதால் எதிர் காலத்திலும் சுயட்சையாக நபர்களை களத்தில் இறக்கி உறுப்பினரை பெறக்கூடிய வாய்ப்பிருக்கிறதா என விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் தற்போதுள்ள தேர்தல் சட்ட முறையில் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால் மாவட்ட ரீதியாக வாக்குகளை பெறுபவர்களே உறுப்பினர்களாக வர அதிக சந்தர்ப்பம் இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை பலகட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்க திட்டமிட்டு வருவதாலும் கட்சிகளுக்கு இடையே பல்வேறுபட்ட ஒப்பந்தங்களும் செய்யப்படவுள்ளதாலும் சம்மாந்துறையில் பாராளுமன்ற பிரதிநிதித் துவத்துக்காக போட்டியிட இருக்கின்ற தனி நபர்களில் அநேகருக்கு போட்டியிடக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்த வரையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிழக்குமாகாண சபை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கு மீண்டும் அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாலும் முஸ்லிம் காங்கிரசின் சிபார்சின் பெயரில் எம்.ஐ. மாகிர் அவர்களுக்கும் அரசில் உயர் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாலும் இவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற வினா மக்கள் முன் தற்போது எழ ஆரம்பித்துள்ளது. 

இருந்த போதும் கடந்த 2012ல் சம்மாந்துறையின் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் கீழ் சம்மாந்துறை தொகுதி சார்பான வேட்பாளராக சட்டத்தரணி முஸ்தபா அவர்களே போட்டியிடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசிய கட்சியும் தங்களது பேச்சு வார்த்தையின் போது பொருந்திக் கொண்டதாக கூறப்படும் தொகுதிக்கு ஒரு உறுப்பினரை நியமிப்பது என்ற திட்டத்தின் கீழ் கல்முனை தொகுதிக்கு எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் பொத்துவில் தொகுதிக்கு பைசால் காசீம் அவர்களும் சம்மாந்துறை தொகுதிக்கு எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் நியமிக்கப் படக்கூடிய வாய்ப்பிருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.

சம்மாந்துறை தொகுதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்கள் நியமிக்கப்படுவாராக இருந்தால் அவர் சம்மாந்துறை இழந்து நிற்கும் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு எவ்வாறு தனது வியூகங்களை வகுப்பார் அத்துடன் ஏனைய தொகுதிகளில் இருந்து தனது வெற்றிக்கு எவ்வாறு செயற்படுவார் என்பதையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் அவரை வெற்றியடையச் செய்வதன் ஊடாக சம்மாந்துறை மக்களின் கனவை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -