முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தமது சவாலை இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சொத்து விபரங்களை வெளியிடுமாறு தாம் விடுத்த பகிரங்க சவாலை, கோதபாய ராஜபக்ஸ இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்து கோதபாய கருத்து வெளியிட்டதனைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் 12ம் திகதி ரவி கருணாநாயக்க, கோதபாயவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரியிருந்தார்.
சவால் விடுக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் பதில் எதனையும்அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மைப் போன்றே ஏனையவர்களையும் கருத வேண்டாம் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் எதிர்க்கட்சி எதிர்நோக்கிய நெருக்கடிகளை நிலைமைகளை தற்போதைய எதிர்க்கட்சி எதிர்நோக்க புதிய அரசாங்கம் விடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
