ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
மட்டக்களப்பு மத்திய கல்விவலயத்துக்கு புதிய பணிப்பாளராக, கின்னியா கல்வி வலயத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ஐ.சேகு அலி தனது கடமையை பொறுப்பேற்க உள்ளார்.
எம்.ஐ. சேகு அலி அவர்கள் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் கல்குடா,ஓட்டமாவடியில் திருமணம் செய்து நீண்டகாலமாக கல்குடா மக்களின் மரியாதைக்கு பாத்திரமானவராக வாழ்ந்து வருபவராவார்.
இவரின் சேவை மத்திய மட்டக்களப்பு வலயத்துக்கும் கல்குடா பிரதேசத்துக்கும் துரதிஸ்டவசமாக கிடைக்காமையினால் கல்குடாவின் படித்த சமூகமானது இதனை பெரும் கவலையாகவும் குறையாகவுமே இன்று வரைக்கும் பார்த்து வந்தது. ஆகையால் இவருடைய இந்த மட்டக்களப்பு மத்திய வலயத்துக்கான இடமாற்றத்தினை முன்னிட்டு கல்குடாவின் படித்த சமூகமானது பெரும் மகிழ்ச்சி அடைவதுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் அறியக் கிடைக்கிடைக்கின்றது.
