கிழக்கில் நல்லாட்சி முதலமைச்சர் நஸீர் அஹமதிடம் வாழ்த்துத் தெரிவித்த இந்திய பிரதமர் மோடி -படங்கள்.



ந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் மற்றும் முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், ஆகியோர் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

கிழக்கு மாகாணத்தில் விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவித்தல், வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான தொழில் நிலையங்களை அமைத்தல் சம்மந்தமாகவும் மற்றும் ஏனைய பல விடையங்கள் சம்மந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் இந்திய பிரதமரிடம் எடுத்துக்கூறினார்.

இச்சந்திப்பின்போது இந்தியப்பிரமர் நரேந்திர மோடி இலங்கையில் கிழக்கின் நல்லாட்சி பற்றி கேட்டறிந்து முதலமைச்சருக்கு வாழ்த்தும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -