மிஸ்பாஉல் ஹக்-
சம்மாந்துறை மக்கள் பல வருட காலமாக தக்க வைத்து வந்த பாராளுமன்றப் பிரதிநிதித் துவத்தினை கடந்த ஒரு தசாப்த காலமாக இழந்து தவிக்கின்றார்கள். இதனை தங்களுக்கு சாதகாமாகப் பயன்படுத்தி சில புல்லுருவி அரசியல் வாதிகள் மக்களிடம் நுழைய முற்படுகின்றனர்.
இம் முறை சம்மாந்துறை மக்கள் தங்கள் பிரதிநித் துவத்தினை எவ்வாறு தேர்ந் தெடுப்பது? என்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற போது நான் ஏன் இத் தேர்தலில் களமிறங்க உள்ளேன் என்பதனை வெளிப்படுத்தும் கடப்பாடு எனக்குள்ளது.
சம்மாந்துறை மக்கள் தங்கள் பிரதிநிதித் துவத்தினை பெற அதீத பிரயத்தனம் எடுப்பதற்கான பிரதான காரணம் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் மூலம் தங்கள் ஊரிற்கு சில நல்ல விடயங்கள் நடக்கலாம் என்பதனால் என்பதனை மறுக்க முடியாது.
ஆனால் வருபவர்கள் கதிரைகளினை அலங்கரிப்பவர்களாகவே உள்ளனர். இவர்களினைத் தேர்ந்தெடுத்து மக்கள் என்ன இலாபம் காணப் போகிறார்கள்?. இவர்களின் தீர்வுப் பொதிகள் தான் என்ன? இதனை மக்களும் கேட்பதில்லை, அவர்களும் சொல்லுவதுமில்லை. இவ்வாறு அரசியல் செய்யும் நோக்கம் என்னிடம் அல்ல.
நான் இத் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றால்;
1.அம்பாறை மாவட்டத்தில் உள்ள 2000 இற்கும் மேற்பட்ட இளைஞ்சர் யுவதிகளுக்கு உள் நாடு மற்றும் வெளி நாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரச, தனியார் துறைகளில் வேலை வாய்ப்புக்களினை எனது சக்திக்கு உட்பட்ட விதத்தில் தான் தேர்தெடுக்கப்பட்டு இரண்டு வருட காலத்தினுள் பெற்றுக் கொடுப்பேன்.
2.அம்பாறை மாவட்டத்தில் உள்ள விவசாயக் காணிகளுக்கான நீர்ப்பாசனத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளினை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பேன்.
3.அம்பாறை மாவட்டத்தில் இது வரை உறுதிகள் வழங்கப்படாத காணிகளுக்கு உறுதியினை வழங்க உடனடி நடவடிக்கை மேற் கொள்வேன்.
4.சம்மாந்துறை பிரதேச சபையினை நகர சபையாக தர முயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.
5.சம்மாந்துறை பழைய சந்தைப் பகுதியினை அபிவிருத்தி செய்ய என்னாலான முயற்சிகளில் ஈடு படுவேன்.
6.சம்மாந்துறை வைத்தியசாலையில் நிலவும் வளப்பற்றாக் குறைகளினைக் கண்டறிந்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதோடு தபால் அலுவலகத்தினை நவீன வசதிகளுடன் மாற்றி அமைப்பேன்.
7.இன்னும் எனது சக்திக்கு உட்பட்ட விதத்தில் என்ன என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வேன்.
இவற்றினை மக்களுக்கு செய்து கொடுப்பதற்கான அனைத்து திட்டங்களும் என்னிடம் உள்ளது என்பதனை இவ் இடத்தில் நான் தைரியமாகக் கூறிக் கொள்வதோடு இவற்றினை நான் எனக்கு வழங்கப்டுகின்ற உரிய கால எல்லையினுள் நிறைவேற்றாத போது அதன் பிற்பாடு எனது வாழ் நாளில் ஒரு போதும் தேர்தலில் களமிறங்க மாட்டேன் என்பதனையும் தெளிவாக கூறிக் கொள்கிறேன்.
எனது செயற்பாடுகள் அனைத்தும் புத்தி ஜீவிகள், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனை பெறப்பட்டே மேற் கொள்ளப்படும். இச் செயற்பாடுகளினை நான் செய்து தருவதனை மையமாக கொண்டே தேர்தல் கேட்க உள்ளதால் இதனை யாராவது ஒருவர் தான் செய்து தருவதாக மக்களிடம் பகிரங்கமாக உறுதியளிப்பதோடு அதற்கான தகுந்த வழி முறைகளையும் முன் வைப்பாராக இருந்தால் நான் அவ் வேட்பாளருக்கு விட்டுக் கொடுக்கத் தயாராகவே உள்ளேன்.
இதனை செய்து தர யாரும் முன் வராத போதே நான் இத் திட்டங்களுடன் தேர்தலில் போட்டி இடும் சிந்தனையில் உள்ளேன். எனது கட்சி எது? எனது செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்? போன்ற அனைத்தினையும் தீர்மானிக்கும் தார்மீக பொறுப்பினை பொது மக்களாகிய உங்களிடமே நான் ஒப்படைக்கிறேன்.
இவ்வண்ணம்
அல்-ஹாஜ் உதுமாங்கண்டு நபீர்-
