ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளானதில் 150 பயணிகள் பலி -விபரம்



ஜேர்மனி விமானம் ஒன்று பிரான்ஸ் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 150 பயணிகள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஸ்பெயினின் பார்சிலோனா(Barcelona) நகரிலிருந்து, ஜேர்மனின் டுசெல்டார்ப் (Düsseldorf) நகருக்கு 150 பயணிகளுடன் சென்ற, ஜேர்மனி விங்கிஸ் A320 German Wings என்ற விமானம் சற்று முன் பிரான்ஸ் நாட்டின் Digne மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் விமானம் அப்பர் பிலோன்(Upper Bléone) என்ற பள்ளதாக்கில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தை General Directorate of Civil Aviation அலுவலகம் உறுதி செய்துள்ளது.

தற்போது விபத்தை உறுதி செய்த பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சரான பெர்னாடு கசினுவே(Bernard Cazeneuve) மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.

அவர் பார்சிலோனாவில் விமான விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், அங்கே விபத்தான விமானத்தின் பாகங்களை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.










இந்த விபத்து குறித்து பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ்(Manuel Valls) பேசுகையில், விமானத்தில் பயணித்த 142 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் இறந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் எந்த பயணியும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் சற்று முன்பு தான் ஜேர்மனிய ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கலை(Angela Merkel) தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விமானம் விபத்து குறித்து தகவல் அனுப்பினேன் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹாலாண்டே(Francois Hollande) கூறியுள்ளார்.

மேலும் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து கடைசியாக 10:47 (09:47 GMT) மணியளவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பை விடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -