எம்.ஜே.எம். முஜாஹித், சஜீத்-
இந்திய அரசு இலங்கை மக்களின் நன்மை கருதி பெரும் அபிவிருத்தி திட்டங்களை செய்து வருகின்றது. மிக விரைவில் மட்டக்களப்பு, கல்முனை, அறுகம்பை ஊடாக புகையிரத போக்குவரத்து திட்டத்தினை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது என இந்திய இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்தார்.
இந்திய அரசின் ஒரு கோடி நிதி மூலம் நிர்மாணிக்கப்பட்ட அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரின் மொழி கற்பித்தல் ஆய்வு கூடம் திறந்து வைக்கும் வைபவம் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுபையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, கல்வி அமைச்சின் பணிப்;பாளர் எஸ். முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல். பலீல் பி.ஏ உட்பட கல்விமான்களும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)