அபூதனா-
அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் மிகவும் சுதந்திரமாக இரவிலும் பகலிலும் நடமாடுகின்றன.அது மட்டுமன்றி பிரதான வீதிகளில் மாட்டுச்சாணங்களும் காணப்படுகின்றன.இவ்வாறான காரணங்களால் வாகன விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன.இதனால் பிரதேச மக்களும்,பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகரசபையினதும். அக்கரைப்பற்றுப் பொலிசாரினதும் நடவடிக்கை போதாமல் உள்ளது.இந்நிலை தொடர்வது 'பூனைக்கு மணிகட்டுவது யார்?' என்ற கதை போலுள்ளது.ஆகவே. இவ்விடயத்தில் இனியாவது உரிய நடவடிக்கையை உரியவர்கள் எடுபார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
