ந.குகதர்சன்-
மட்டக்களப்பு உறுகாமம் பிரதேசத்தில் நீர்பாசனம் தேவைப்பட்ட 1600 ஏக்கர் விவசாய காணிகளுக்கான நீரினை வழங்குவதற்கு சமுர்த்தி, வீடமைப்பு பிரதிமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் நீர்ப்பாசன அதிகாரிகள் கொழும்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு உறுகாமம் பிரதேசத்தில் நீர்பாசனம் தேவைப்பட்ட 1600 ஏக்கர் விவசாய காணிகளுக்கான நீரினை வழங்குவதற்கு சமுர்த்தி, வீடமைப்பு பிரதிமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் நீர்ப்பாசன அதிகாரிகள் கொழும்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உறுகாமம் பிரதேசத்தில் தமிழ்,முஸ்லிம் விவசாயிகளால் சுமார் 15000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்கை செய்யப்பட்டு வருகின்றது.
மேலதிகமாக 1600 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதற்கென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டிருந்த போதிலும் விவசாயத் திணைக்களத்தின் அசமந்தப் போக்கினால் 1600 ஏக்கருக்கான நீர்பாசன வசதி தடைப்பட்டதனால் விவசாய செய்கை பாதிக்கப்பட்டு காணப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகள் சமுர்த்தி, வீடமைப்பு பிரதிமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அமைச்சர் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக அப்பிரச்சனைக்கான தீர்வு திங்கட்கிழமை கிடைத்தது.
கொழும்பில் நீர்பாசன திணைக்கள தலைமைக் காரியாலயத்தில் சமுர்த்தி, வீடமைப்பு பிரதிமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கும் நீர்பாசன திணைக்கள உயர் அதிகாரிகளுக்குமிடையிலான பேச்சுவாரத்தையின் பின்னர் உறுகாமம் பிரதேசத்தில் மேலதிகமாக நீர்பாசனம் தேவைப்பட்ட 1600 ஏக்கர் விவசாய காணிகளுக்கான நீரினை வழங்குவதற்கு நீர்பாசன அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்றே வாகரை புணாணை மேற்கு விவசாயிகளும் இந்நீர்பாசன பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதால் இப்பிரச்சினை தொடர்பாகவும் நீர்பாசன திணைக்கள அதிகாரிகளுக்கும் சமுர்த்தி, வீடமைப்பு பிரதிமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்றும் மிக விரைவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)