தொகுதி முறைமை நீக்­கப்­பட்­டுள்­ள­மையால் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான காப்­பீ­டுகள் எதுவும் இல்லை-முஜிபுர் ரஹ்மான்

புதிய தேர்தல் முறையில் இரட்டை அல்­லது பல் அங்­கத்­துவ தொகுதி முறைமை நீக்­கப்­பட்­டுள்­ள­மையால் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான காப்­பீ­டுகள் எதுவும் இல்லை என மேல்­மா­காண சபை உறுப்­பி­னரும் மத்­திய கொழும்பு ஐக்­கிய தேசிய கட்சி அமைப்­பா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்­தினார். 

சிறு­பான்­மை­யி­னரின் நலன்­களை பேணும் விட­யங்­களை புதிய தேர்தல் சட்­டத்தில் உள்­ள­டக்க வேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மத்­திய கொழும்பு ஐக்­கிய தேசிய கட்சி அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே முஜிபுர் ரஹ்மான் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

1978 ஆம் ஆண்டு அர­சியல் திருத்­தத்­தி­னூ­டாக விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ தேர்தல் முறை நாட்­டிற்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்கு முன்னர் இருந்த தொகு­தி­வாரி பிர­தி­நி­தித்­துவ தேர்தல் முறையின் போது நாட்டில் பல் அங்­கத்­துவ தேர்தல் தொகு­தியும் இரட்டை அங்­கத்­துவ தேர்தல் தொகு­தி­களும் இருந்­தன. 

மத்­திய கொழும்பு தொகு­தி­யா­னது மூன்று அங்­கத்­த­வர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தோடு மட்­டக்­க­ளப்பு தொகுதி, நுவ­ரெ­லிய மஸ்­கெலிய தொகுதி, பேரு­வளை தொகுதி, ஹரிஸ்­ப­த்துவ உள்­ளிட்ட தொகு­திகள் இரு அங்­கத்­துவ தொகு­தி­க­ளாக காணப்­பட்­டன. 

இத்­தொ­கு­தி­களில் பல்­லின மக்கள் செறிந்து வாழ்­கின்­ற­மை­யினால் முன்னர் இருந்த தேர்தல் முறை­யின்­படி பல் அங்­கத்­துவம் அல்­லது இரட்டை அங்­கத்­துவ முறைமை பின்­பற்­றப்­பட்­டது. ஆனால் தற்­போது கொண்டு வரப்­பட்­ட­வி­ருப்­ப­தாக கூறப்­படும் புதிய தேர்தல் திருத்­தத்தில் இந்த முறைமை இல்­லாது செய்­யப்­பட்­டுள்­ளது.

இது சிறு­பான்மை மக்­க­ளுக்கு இருக்­கின்ற காப்­பீ­டு­களை இல்­லாது செய்யும் செயற்­பா­டாகும். சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான வரப்­பி­ர­சா­தங்­களை தட்­டிப்­ப­றிப்­பதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. அத்­துடன் இந்த முறை மூலம் சிறு கட்­சிகள், சிறு­பான்­மை­யின கட்­சி­க­ளுக்கு அநி­யாயம் இழைக்­கப்­ப­டு­கின்­றது. கொண்­டு­வ­ரப்­படும் புதிய தேர்தல் முறைமை எல்லா தரப்­பி­ன­ருக்கும் நன்மை பயக்­கக்­கூ­டி­ய­தாக அமைய வேண்டும். 

அத்­தோடு தேர்தல் முறைமை மாற்­றங்கள் ஏற்­ப­டுத்த வேண்­டி­ய­தற்­கான முக்­கிய கார­ண­மாக விருப்பு வாக்­கு­மு­றையும் அதற்­கான போட்­டி­யுமே சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

விருப்பு வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அதி­க­ள­வான பணம் செல­வி­டப்­ப­டு­வ­தா­கவும் இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு மாவட்ட ரீதி­யி­லான விக­ி­தா­சார தேர்தல் சட்­டத்தின் விருப்பு வாக்கு முறை­மையை நீக்­கி­விட்டு தொகுதி வாரி முறையை மீண்டும் அமு­லுக்கு கொண்டு வர வேண்டும் என குறிப்­பி­டு­கின்­றனர். அத்­துடன் பண பலம் படைத்­த­வர்கள் அல்­லது செல்­வாக்­கு­மிக்­க­வர்­க­ளுக்கே அர­சியல் பிர­வே­சத்­திற்கு இம்­மு­றைமை வழி­வ­குப்­ப­தா­கவும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. 

விருப்பு வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அதிக பணம் செல­வி­டப்­ப­டு­வது உண்­மையே. அது நிறுத்­தப்­ப­ட­வேண்­டி­ய­தொன்­றாகும். என்­றாலும் அதனை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்­ப­தற்­காக தேர்தல் முறை­மையை மாற்றி சிறுபான்மை மக்களுக்கு அநியாயம் செய்ய முடியாது. இது தலை வலிக்கு தலையணையை மாற்றுவது போன்றதாகும்.

எனவே தேர்தல் பிரசாரம் தொடர்பில் புதிய திருத்தங்கள் உள்ளடக்கப்படவேண்டும். அதில் தேர்தல் பிரசாரத்திற்கு பணம் செலவிடப்படவேண்டிய விதம் தொடர்பில் இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படல்வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -